News February 13, 2025
ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு இதை செய்தால் ..!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739365729297_1231-normal-WIFI.webp)
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க முடியாதவர்கள் குறைந்தது, 30 நிமிடமாவது நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் குறைவதாகக் கூறுகிறார்கள். ஆனால், நடைப்பயிற்சியின் போது, கொஞ்சம் வேகமாக நடக்க வேண்டும். இது உடலின் சுவாசம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. SHARE IT.
Similar News
News February 13, 2025
10வது போதும்.. மத்திய அரசில் 21,000 காலிப்பணியிடங்கள்!!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_112024/1730850732688_1173-normal-WIFI.webp)
இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழகத்தில் மட்டும் 2,292 கிராம அஞ்சல் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய <
News February 13, 2025
வயநாடு சம்பவம்: வருத்தத்தில் பிரியங்கா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739424217414_1328-normal-WIFI.webp)
கேரளாவின் வயநாட்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த தொகுதியின் MP பிரியங்கா காந்தி, பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 13, 2025
ரூபாய் நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739420497512_1231-normal-WIFI.webp)
₹10 நோட்டுக்கு ₹0.96 *₹20 நோட்டுக்கு ₹0.95 *₹50 நோட்டுக்கு ₹1.13 *₹100 நோட்டுக்கு ₹1.17 *₹200 நோட்டுக்கு ₹2.37 *₹500 நோட்டுக்கு ₹2.29 செலவாகிறதாம். தற்போது ₹2,000 நோட்டு புழக்கத்தில் இல்லை. அதே நேரத்தில், ஒப்பிடுகையில் நாணயங்களின் உற்பத்திக்கே அதிகம் செலவாகிறது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஒன்றிணைந்து இதற்கான செலவை செய்கிறார்கள்.