News February 13, 2025

முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24ம் தேதி திறப்பு

image

TNல் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை வரும் 24ம் தேதி CM ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மாநிலம் முழுவதும் மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என CM அறிவித்திருந்தார். B.Pharm, D.Pharm (அ) அவர்கள் ஒப்புதல் பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

Similar News

News February 13, 2025

வயநாடு சம்பவம்: வருத்தத்தில் பிரியங்கா

image

கேரளாவின் வயநாட்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த தொகுதியின் MP பிரியங்கா காந்தி, பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 13, 2025

ரூபாய் நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?

image

₹10 நோட்டுக்கு ₹0.96 *₹20 நோட்டுக்கு ₹0.95 *₹50 நோட்டுக்கு ₹1.13 *₹100 நோட்டுக்கு ₹1.17 *₹200 நோட்டுக்கு ₹2.37 *₹500 நோட்டுக்கு ₹2.29 செலவாகிறதாம். தற்போது ₹2,000 நோட்டு புழக்கத்தில் இல்லை. அதே நேரத்தில், ஒப்பிடுகையில் நாணயங்களின் உற்பத்திக்கே அதிகம் செலவாகிறது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஒன்றிணைந்து இதற்கான செலவை செய்கிறார்கள்.

News February 13, 2025

BREAKING: வருமான வரி மசோதா லோக்சபாவில் தாக்கல்

image

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. FM நிர்மலா சீதாராமன் மசோதாவை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி MPக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். எனினும், அமளிக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அடுத்த நிதியாண்டில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், JPCயின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பப்படும் என தெரிகிறது.

error: Content is protected !!