News February 13, 2025

அதிகபட்ச மகளிர் உரிமை தொகை: அண்ணாமலை உறுதி

image

TNல் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்​டிலேயே எந்த மாநிலத்​தி​லும் இல்லாத அளவுக்கு அதிகபட்​சமாக மகளிர் உரிமை தொகை வழங்​கப்​படும் என அண்ணாமலை கூறியுள்ளார். மகாராஷ்டிரா​வில் தற்போது தமிழகத்​தைவிட அதிகமாக மகளிர் உரிமை தொகை வழங்​கப்​படு​வதாகவும், டெல்​லி​யிலும் ₹2,500 அறிவிக்​கப்​பட்​டு உள்​ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், தமிழிசை தலைமையிலான குழு, 2026 தேர்தல் அறிக்கையை தயார் செய்​யும் என்றும் கூறினார்.

Similar News

News February 13, 2025

ரூபாய் நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?

image

₹10 நோட்டுக்கு ₹0.96 *₹20 நோட்டுக்கு ₹0.95 *₹50 நோட்டுக்கு ₹1.13 *₹100 நோட்டுக்கு ₹1.17 *₹200 நோட்டுக்கு ₹2.37 *₹500 நோட்டுக்கு ₹2.29 செலவாகிறதாம். தற்போது ₹2,000 நோட்டு புழக்கத்தில் இல்லை. அதே நேரத்தில், ஒப்பிடுகையில் நாணயங்களின் உற்பத்திக்கே அதிகம் செலவாகிறது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஒன்றிணைந்து இதற்கான செலவை செய்கிறார்கள்.

News February 13, 2025

BREAKING: வருமான வரி மசோதா லோக்சபாவில் தாக்கல்

image

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. FM நிர்மலா சீதாராமன் மசோதாவை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி MPக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். எனினும், அமளிக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அடுத்த நிதியாண்டில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், JPCயின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பப்படும் என தெரிகிறது.

News February 13, 2025

8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: தவெக நிர்வாகி கைது

image

விழுப்புரம் அருகே காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தவெக சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளரின் மைத்துனரும், நரசிங்கராயன்பேட்டை பொருளாளருமான சரவணன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!