News March 28, 2024
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஆரணி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இன்று முதற்கட்ட பிரச்சாரமாக ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேதாஜிபுரம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். உடன் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், அதிமுக அமைப்பு செயலாளர், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர அதிமுக செயலாளர்கள், பேரூர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 17, 2025
தி.மலை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

தி.மலை இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<
News November 17, 2025
ALERT: தி.மலையில் கனமழை பெய்யும்!

தி.மலை மாவட்டத்தில் இந்து இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனவே இன்று முதல் பரவலாக மழையை ஏதிர்பார்க்கலாம் மக்களே! முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
தி.மலை: அத்துமீறிய அரசு ஊழியர்..வாய் கூசாமல் வசைபாடல்!

தி.மலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த கணவரை இழந்த, 35 வயது பெண், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த சதீஷ்குமார், 36 மேல்வில்லிவலம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். இவர் அந்த பெண்ணிடம் “நீ அழகாக இருகிறாய், நீ அழகாக இருக்கிறாய், எப்போது வருகிறாய் என்றும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என வாய் கூசாமல் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


