News February 13, 2025

TN பாஜக தலைவராக தொடர முடியாது: அண்ணாமலை

image

திமுகவை அகற்றாமல் தனது அரசியல் பயணம் நிறைவடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக தலைவராக மீண்டும் தொடர முடியாது என்பது தனக்கு தெரியும் என்றும், ஆனால் இங்கிருந்து செல்லும் முன் அண்ணா அறிவாலயத்தில் கடைசி செங்கல்லையும் உருவாமல் விடமாட்டேன் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சு, அவர் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்பதையே உறுதி செய்வதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Similar News

News February 13, 2025

சிறந்த CM பட்டியல்: ஸ்டாலின் எத்தனையாவது இடம்?

image

நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், சிறந்த முதல்வர்களின் பட்டியலை தேசிய ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் 5.2% வாக்குகளைப் பெற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 35.3% வாக்குகளுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் இடத்தையும், 10.6% வாக்குகளைப் பெற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

News February 13, 2025

6 நாட்களுக்குப் பின் மீண்ட பங்குச்சந்தைகள்

image

இந்திய பங்குச்சந்தைகள் 6 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்றம் கண்டன. BSE 400 புள்ளிகளுக்கு மேலாகவும், நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேலாகவும் உயர்வை சந்தித்து வர்த்தகமாகின்றன. சிப்லா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன.

News February 13, 2025

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் இனி பணிநீக்கம்..

image

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் வகையில் விதிகளை திருத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலும் தடுக்கவும், புகாரில் சிக்கியவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் ஆகி ஜாமின் பெற்று வெளியில் வந்துவிடுவதால் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!