News February 13, 2025

நடிகருக்கு பெண் தொடர்பு: கலங்கி நின்ற பிரபல நடிகை

image

ஒருகாலத்தில் தீவிரமாக காதலித்து வந்த நடிகை மனிஷா கொய்ராலாவும், ‘காலா’ பட வில்லன் நானா படேகரும் பிரிந்த கதை மீண்டும் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே திருமணமான நானா படேகர், தன்னுடன் நடித்த ஆயிஷா ஜுல்கா என்ற நடிகையுடனும் தொடர்பிலிருந்த போது, மனிஷாவிடம் ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். வெறுத்துப்போன மனிஷா, ‘ஒழிஞ்சு போ…’ என்று சொல்லி, அன்றே படேகரை விட்டுவிலகி பழகுவதை நிறுத்திக் கொண்டாராம்.

Similar News

News February 13, 2025

காய்கறி, பூண்டு விலை சரிவு

image

சுப முகூர்த்தம், தைப்பூசம் காரணமாக சில வாரங்களாக அதிகரித்திருந்த காய்கறி, பூண்டு விலை இன்று(பிப்.13) கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ₹15 – ₹25, கத்திரிக்காய் – ₹35 – ₹45, கேரட் – ₹40, சின்ன வெங்காயம் – ₹30 – ₹70, பெரிய வெங்காயம் – ₹20 – 30, உருளைக்கிழங்கு ₹15 – ₹25, பூண்டு 80 – 100க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 13, 2025

முத்தத்தில் இத்தனை வகைகளா..?

image

*கைகளில்: மரியாதையின் வெளிப்பாடு *நெற்றியில்: இந்த வாழ்நாள் உன்னுடனே என அர்த்தம் *மூக்கில்: ரொம்ப அழகாக இருக்கிறாய் என அர்த்தம் *கன்னத்தில்: உன்னுடன் இருக்கணும் என அர்த்தம் *கண்களில்: உலகில் வேறு யாரையும் இவ்வளவு காதலிக்கவில்லை என அர்த்தம் *உதட்டில்: என் உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் என அர்த்தம். இன்னைக்கு கிஸ் டே.. அதனால் முத்தம் கொடுக்க மறந்துடாதீங்க.

News February 13, 2025

‘விடாமுயற்சி’ படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம்

image

‘விடாமுயற்சி’ படத்திற்கு நடிகர் அஜித்குமார் ₹105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக அனிருத் ₹8 கோடி, த்ரிஷா ₹6 கோடி, அர்ஜுன் ₹5 கோடி, இயக்குநர் மகிழ் திருமேனி ₹4 கோடி, ரெஜினா ₹1 கோடியும் சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட் ₹230-350 கோடி என்று இருக்கும் நிலையில், இதுவரை அப்படம் ₹150 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

error: Content is protected !!