News February 13, 2025
தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது: தமிழிசை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_82024/1724147305814-normal-WIFI.webp)
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை தெரிவித்துள்ளார். பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் வென்று, தமிழகத்தை காவி நிச்சயம் ஆளும் என்றார். தமிழகத்தில் பெரியார் தமிழை வளர்க்கவில்லை என்றும், பெரியாழ்வார் வளர்த்த தமிழ்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்துக்கான ஆட்சியை அகற்றிவிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்காக நடைபெறும் ஆட்சி விரைவில் அமையும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News February 13, 2025
சமையல் எண்ணெய் விலை உயர்வு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739409782512_785-normal-WIFI.webp)
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவால், சமையல் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 5% உயர்ந்துள்ளது. நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 60% இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உற்பத்தி விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கடந்த 2 வாரங்களில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹6 வரை அதிகரித்துள்ளது.
News February 13, 2025
‘சுப்ரமணியபுரம் 2’ வருகிறதா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739411408484_1173-normal-WIFI.webp)
‘சுப்ரமணியபுரம்’ படம் போலவே மற்றொரு படத்தை இந்த ஆண்டு இயக்க உள்ளதாகவும், அதற்காகவே இதே கெட்டப்பை பராமரித்து வருவதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல், ‘குற்றப் பரம்பரை’ படம் உருவாவது தயாரிப்பாளர் கையில் தான் உள்ளதாக அவர் கூறியுள்ளார். பாரதிராஜாவும், பாலாவும் அப்படத்தில் தன்னை நடிக்க வைக்க திட்டமிட்டதாகவும், ஆனால் வேறு காரணங்களால் அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 13, 2025
உச்சத்தில் தங்க இடிஎஃப் முதலீடு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_112024/1731559943742_1153-normal-WIFI.webp)
கடந்த மாதத்தில் தங்க ETF திட்டங்களில், வரலாறு காணாத அளவுக்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாக இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரேமாதத்தில் தங்க ETFல் ₹3,751 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதை விட, ETF திட்டங்கள் வாயிலாக தங்கத்தை யூனிட்களாக டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.