News February 13, 2025
கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739176327886_1241-normal-WIFI.webp)
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருவை கலைத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாக அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தொடர்ந்த வழக்கில், அவருக்கு குழந்தையை வளர்க்கும் பக்குவம் இல்லை என்று வழக்கறிஞர் வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிறுமியை கருவை கலைக்க விடாமல் செய்வது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று கூறி கருவை கலைக்க உரிமையளித்தனர்.
Similar News
News February 13, 2025
கடன் தொல்லையை விரட்டும் விநாயகரின் மூல மந்திரம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739409633650_1231-normal-WIFI.webp)
முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். விநாயகர் மந்திரங்களை பிரம்ம முகூர்த்தத்தில் சொல்வது மிகவும் நல்லது என்றாலும், ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’ என்பதை உச்சரித்து வந்தால், விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியம் கைக்கூடும்.
News February 13, 2025
இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739410722019_55-normal-WIFI.webp)
இபிஎஸ் நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்ததால், அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அவர் நாசுக்காக பதிலளித்தாலும், மற்றொரு சர்ச்சையும் வெடித்துள்ளது. நேற்று நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், இபிஎஸ் பெயரை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை. தற்போது இது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
News February 13, 2025
சிறந்த அணியுடன் தான் தோற்றோம்: பட்லர்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739409705739_1173-normal-WIFI.webp)
ODI தொடரில் IND அணி ஒயிட் வாஷ் செய்த நிலையில், ஒரு சிறந்த அணியால் தான் தாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என ENG கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். தங்களுடைய அணுகுமுறை சரிதான், அதில் எந்த தவறும் இல்லை எனவும், ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் தவறு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய அணி தங்களுக்கு பல சவால்களை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.