News February 13, 2025

இது நியாயமா மீடியா?

image

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களிடத்தில் கூட “விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா?” என்று கேள்வி கேட்பதை ஊடகத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோன்ற கேள்வியை இன்று பிரேமலதாவிடம் கேட்டபோது, ”அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் 20 வருட கட்சி. எங்களிடம் கேட்கக்கூடாது” என்று நறுக்கென பதில் கொடுத்தார். நியாயமாக இந்தக் கேள்வியை புதிதாக கட்சித் தொடங்கியவர்களிடம்தானே கேட்க வேண்டும்!

Similar News

News February 13, 2025

இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்

image

இபிஎஸ் நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்ததால், அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அவர் நாசுக்காக பதிலளித்தாலும், மற்றொரு சர்ச்சையும் வெடித்துள்ளது. நேற்று நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், இபிஎஸ் பெயரை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை. தற்போது இது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

News February 13, 2025

சிறந்த அணியுடன் தான் தோற்றோம்: பட்லர்

image

ODI தொடரில் IND அணி ஒயிட் வாஷ் செய்த நிலையில், ஒரு சிறந்த அணியால் தான் தாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என ENG கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். தங்களுடைய அணுகுமுறை சரிதான், அதில் எந்த தவறும் இல்லை எனவும், ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் தவறு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய அணி தங்களுக்கு பல சவால்களை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

ரம்ஜான் அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

image

அரசு விடுமுறை நாளான ரம்ஜான் பண்டிகை அன்று மார்ச் 31 (திங்கட்கிழமை) வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆண்டின் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசுத் துறைகள் மேற்கொள்ளும் என்பதால், மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!