News March 28, 2024

ஜனநாயக முறையில் தேர்தல் நடக்குமா?

image

துறையூரில் இன்று மாலை பாலக்கரை கலைஞர் திடலில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுகிறதா? தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? என கேள்வி எழுப்பினார்.

Similar News

News November 17, 2025

திருச்சி: மழையா? இதை மறக்காதீங்க!

image

திருச்சி மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE

News November 17, 2025

திருச்சி: ரயிலில் இருந்து கீழே விழுந்து பலி

image

தஞ்சையில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை இரவு 7.25 மணிக்கு திருவெறும்பூா் ரயில் நிலையத்தை கடந்துசென்றது. அப்போது, திருவெறும்பூா் அருகே ரயில் படியின் அருகே நின்று பயணித்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார், இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

News November 17, 2025

திருச்சியில் குற்றங்கள் அதிகரிப்பு!

image

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குற்ற வழக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் & பெண்களுக்கு எதிராக திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ‘806’ குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது!

error: Content is protected !!