News February 12, 2025
ENG எதிராக இந்தியாவின் மைல்கல் வெற்றி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739376371216_1031-normal-WIFI.webp)
ENG-க்கு எதிராக 2ஆவது அதிக ரன்கள் வித்தியாசத்தில் IND அணி வென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இதற்கு முன்பு 2008இல் ராஜ்கோட்டில் 158 ரன்கள் வித்தியாசத்தில் ENG-ஐ வீழ்த்தியதே இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக இன்றளவும் இருந்து வருகிறது. 2014இல் 133 ரன்களில், 2013இல் 127 ரன்களிலும், 2011இல் 126 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றுள்ளது.
Similar News
News February 13, 2025
கார்த்தியின் கேங்ஸ்டர் படத்தின் புது தகவல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739408963897_1173-normal-WIFI.webp)
கார்த்தியின் 29ஆம் படம் 2 பாகங்களாக உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் பகுதியில் கடல் பின்னணியைக் கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News February 13, 2025
குவியும் வங்கதேசத்தினர்.. தமிழகத்திற்கு புதிய ஆபத்து!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739407926057_1241-normal-WIFI.webp)
திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில் சட்டவிரோதமாக ஏராளமான வங்கதேசத்தினர் நுழைந்துள்ளனர். திருப்பூரில் மட்டும் கடந்த சில வாரங்களில் 50க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர். உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட இவர்கள் அசாம் வழியாகத் தமிழகத்தில் நுழைந்தது தெரியவந்துள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி ஊடுருவும் இவர்களை முறைப்படுத்தாவிட்டால் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என பலரும் எச்சரிக்கின்றனர்.
News February 13, 2025
ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு இதை செய்தால் ..!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739365729297_1231-normal-WIFI.webp)
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க முடியாதவர்கள் குறைந்தது, 30 நிமிடமாவது நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் குறைவதாகக் கூறுகிறார்கள். ஆனால், நடைப்பயிற்சியின் போது, கொஞ்சம் வேகமாக நடக்க வேண்டும். இது உடலின் சுவாசம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. SHARE IT.