News February 12, 2025

‘லவ் மேரேஜ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

image

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கும் இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோடை விடுமுறையில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகளை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 13, 2025

விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்

image

RBI புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ₹50 நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இதனை RBI உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் EX ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய் பெயரில் புதிய ₹50 நோட்டுகளை அச்சிட முடிவு செய்துள்ளது. அதேநேரம், தற்போதுள்ள ₹50 நோட்டுகளும் செல்லுபடியாகும் என தெளிவுபடுத்தியுள்ளது.

News February 13, 2025

கமலை சந்தித்த சேகர்பாபு.. இதுதான் காரணம்?

image

DMK கூட்டணியில் உள்ள மநீம தலைவர் கமலை அமைச்சர் சேகர்பாபு நேற்று திடீரென சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகின. 2021 தேர்தல் கூட்டணியின்போது கமலுக்கு மாநிலங்களவை MP பதவி வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி, விரைவில் கமல் MPயாக தேர்வுசெய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், வைகோவுக்கு MP பதவி மீண்டும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

News February 13, 2025

அதிகபட்ச மகளிர் உரிமை தொகை: அண்ணாமலை உறுதி

image

TNல் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்​டிலேயே எந்த மாநிலத்​தி​லும் இல்லாத அளவுக்கு அதிகபட்​சமாக மகளிர் உரிமை தொகை வழங்​கப்​படும் என அண்ணாமலை கூறியுள்ளார். மகாராஷ்டிரா​வில் தற்போது தமிழகத்​தைவிட அதிகமாக மகளிர் உரிமை தொகை வழங்​கப்​படு​வதாகவும், டெல்​லி​யிலும் ₹2,500 அறிவிக்​கப்​பட்​டு உள்​ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், தமிழிசை தலைமையிலான குழு, 2026 தேர்தல் அறிக்கையை தயார் செய்​யும் என்றும் கூறினார்.

error: Content is protected !!