News February 12, 2025

இலவசங்களால் ஒட்டுண்ணிகள் உருவாகின்றன: SC

image

தேர்தலை முன்னிட்டு கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இலவசமாக ரேஷனும், பணமும் கிடைப்பதால் மக்கள் வேலைக்கு செல்ல தயாராக இல்லை. நாட்டின் வளர்ச்சியில் அவர்களை பங்களிக்க செய்வதை விட்டுவிட்டு, ஒட்டுண்ணிகளை நீங்கள் உருவாக்கி வருகிறீர்கள். ஏழைகள் மீதான உங்கள் கரிசனத்தை, அவர்களை மேம்படுத்துவதில் காட்டுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Similar News

News February 13, 2025

புட்டினுடன் போனில் பேசிய டிரம்ப்

image

ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அப்போது, டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறிய அவர், இரு நாடுகளின் வரலாறு, பலம் குறித்து பேசியதாகவும், விரைவில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழப்பை தடுக்க வேண்டுமென ஆலோசித்தாகவும், இருவரும் பரஸ்பரம் நாடுகளுக்குச் செல்ல உள்ளதாகவும் கூறினார்.

News February 13, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ பிப்ரவரி 13 ▶ மாசி- 1 ▶கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 11:00 AM – 12:00 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:00 AM – 01:00 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶நட்சத்திரம்: மகம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

News February 13, 2025

ஒரே மேடையில் சிம்பு – தனுஷ் – SK?

image

Dawn Pictures தயாரிக்கும் 4வது படத்தின் Title Announcement வீடியோ இன்று வெளியாகிறது. இதன் அறிவிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் தங்கள் தயாரிப்பில் நடித்த அனைத்து ஹீரோக்களையும் ஒரே மேடையில் ஏற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்நிகழ்ச்சியில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவங்க 3 பேரும் ஒரே மேடைக்கு வருவாங்க?

error: Content is protected !!