News February 12, 2025

சபரிமலையில் நடை திறப்பு

image

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வரும் 17 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்காக செல்லலாம். மகர சங்கராந்தி முடிந்தும் கடைசி நாள் வரை பக்தர்கள் அதிகமாக திரண்டதால், மாத பூஜைக்காக திறந்திருக்கும் அடுத்த 5 நாட்களிலும் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 13, 2025

ஐபிஎல்.. RCB ரசிகர்களுக்கு நற்செய்தி!

image

RCB ரசிகர்களே தயாராகுங்கள். அணியின் கேப்டன் யார் என்பதை இன்று காலை 11.30 மணிக்கு RCB அறிவிக்க உள்ளது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த டு பிளெசிஸை அந்த அணி விடுவித்துள்ளதால், அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது கோலி கேப்டனாக அறிவிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கோலி இல்லையென்றால் க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் லிஸ்டில் உள்ளனர்.

News February 13, 2025

சீமானை விளாசித் தள்ளிய தவெக!

image

விஜய்க்கு <<15438367>>பணக்கொழுப்பு<<>> இருப்பதாக விமர்சித்த சீமானை தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் கடுமையாக சாடியுள்ளார். நிருபர்கள் மைக்கை நீட்டினாலே எதையாவது உளறுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் சீமான். திரள்நிதி வாங்கும் சீமானுக்கு, திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாகவே தெரியும். தமிழ்தேசிய அரசியலை வெற்றி பெறாமல் வைத்திருப்பது பற்றி சிந்திப்பதுதான் அவரது வேலை என சம்பத் விமர்சித்துள்ளார்.

News February 13, 2025

பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!

error: Content is protected !!