News February 12, 2025
நாட்டின் பணவீக்கம் குறைந்தது
ஜனவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் 4.31 சதவீதமாகக் குறைந்துள்ளது. டிசம்பர் மாதம் இது 5.22 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால், ஜனவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கொரோனாவுக்குப் பின் 8 சதவீதம் வரை உயர்ந்த சில்லரை பணவீக்கம், 4.31 சதவீதமாக குறைந்திருப்பது மக்களுக்கு நற்செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
Similar News
News February 13, 2025
ராசி பலன்கள் (13.02.2025)
மேஷம் – சாந்தம், ரிஷபம் – திறமை, மிதுனம் – சஞ்சலம், கடகம் – சிரத்தை, சிம்மம் – வாழ்வு, கன்னி – சிக்கல், துலாம் – போட்டி, விருச்சிகம் – இன்பம், தனுசு – பாசம், மகரம் – பணவரவு, கும்பம் – பகை, மீனம் – குழப்பம்.
News February 13, 2025
தவெகவில் உள்ள அனைவருமே குழந்தைகள்தான்
பட்ஜெட்டை விமர்சித்த விஜய்யை கடுமையாக சாடியுள்ளார் அண்ணாமலை. பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி எந்த அம்சமும் இல்லை என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். ஐயா, இது பட்ஜெட் தாக்கல். ஜிஎஸ்டி மீட்டிங் கிடையாது. இது கூட தெரியாதவர்கள்தான் அரசியல் மாற்றம் பற்றி பேசுகிறார்கள். அக்கட்சியில் அனைவருமே குழந்தைகளாக இருப்பதால்தான் தவெகவில் ‘குழந்தைகள் அணி’ உருவாக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கிண்டலடித்தார்.
News February 13, 2025
பெண்களே… நீங்கள் ஒரு கார் புக் பண்றீங்களா?
கேரளாவின் கத்ரிகாடுவில் Uberல் ஒரு வண்டியை புக் செய்த ஒரு பெண்ணுக்கு Whatsappல் அந்த காரின் டிரைவர் மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். ‘நீங்க என்ன செண்ட் யூஸ் பண்றீங்க?’ என்றெல்லாம் கேட்க அப்பெண் அந்நபரை பிளாக் செய்துள்ளார். தொடர்ந்து தனது அதிருப்தியை அவர் எக்ஸ் தளத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து uber இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் நெட்டிசன்கள் கொதிக்கிறார்கள்.