News March 28, 2024

தூத்துக்குடி: அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கனிமொழி எம்பி வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து இன்று இரவு சமூக நலத்துறை அமைச்சருக்கு கீதா ஜீவன் முத்தையாபுரம் முள்ளக்காடு பொட்டல்காடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

Similar News

News November 17, 2025

தூத்துக்குடி வி.ஓ.சி துறைமுகத்தின் புதிய மைல்கல்

image

தூத்துக்குடி VOC துறைமுகம் அக்டோபர் 2025ல் 39,41,283 டன் சரக்குகளை நிர்வகித்து சிறப்பான சாதனைப் படைத்துள்ளது. இது 2024 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 35,52,567 டன்னுடன் ஒப்பிடும்போது 10.94% உயர்வைக் காட்டுகிறது. செயல்திறன் மற்றும் கடல்சார் சேவை தரத்தை மேம்படுத்தும் துறைமுகத்தின் தொடர்ந்த முயற்சியின் பலனாக இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.

News November 17, 2025

3.8 கிலோ கஞ்சா பதுக்கிய மூன்று பேர் கைது

image

தூத்துக்குடி மடத்தூர் சோரீஸ்புரத்தில் உள்ள லாரி செட் ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3. 8 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் தெரு அரிகிருஷ்ணன், ரவிக்குமார், சந்திரசேகர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

News November 16, 2025

மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி பலி

image

தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் கனகலிங்கம்(40). கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் மின் சுவிட்சை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!