News February 12, 2025
மாணவர்களை நிர்வாணமாக்கி ராகிங் கொடுமை
கேரளா, கோட்டயத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் நடந்துள்ள ராகிங் கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்சிங் 1st yr மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள், அவர்களை நிர்வாணப்படுத்தியும், அந்தரங்க உறுப்பில் தம்புள்ஸ் தொங்கவிட்டும், காம்பஸால் குத்தியும் கொடுமை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோ எடுத்தும் பிளாக்மெயில் செய்துள்ளனர். மாணவர்கள் புகாரால், தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.
Similar News
News February 12, 2025
உடலுக்கு வலிமை தரும் புரதம்
இந்திய உணவுமுறை பெரும்பாலும் மாவுச்சத்தை (Carbohydrate) மையப்படுத்தியது. அரிசி, கோதுமை என அனைத்திலுமே மாவுச்சத்தே அதிகம். ஆனால், மாவுச்சத்தை குறைத்து, புரதத்தை உணவில் அதிகம் சேர்த்தால் தசைகள் வலுப்பெற்று, கொழுப்பு குறையும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். உடலுழைப்பு இல்லாத ஒருவர், நாளொன்றுக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் புரதம் உட்கொள்ள வேண்டுமாம். நீங்கள் போதுமான புரதம் எடுக்கிறீர்களா?
News February 12, 2025
முருகன் சைவமா? அசைவமா?
நாங்கள் கறி சாப்பிட்டுவிட்டுதான் முருகனை வழிபடுவோம் என்று சீமான் பேசியதற்கு, இன்று பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், ’வேலம் வெறியாட்டு’ என்ற நிகழ்வு சங்ககாலம் முதல் நடத்தப்படுவதுடன், இதுகுறித்து திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரத்தில் கூட குறிப்புகள் உள்ளதாகவும், அந்நிகழ்வில் முருகனுக்கு ஆட்டுக்கறி படையல் வைப்பது வழக்கம் என ஒருசாரார் கூறுகின்றனர். உங்கள் ஊரில் இந்தப் பழக்கம் உண்டா?
News February 12, 2025
BLOOD MOON பார்க்கனுமா?
இந்தியாவில் தெரியக்கூடிய அடுத்த முழு சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நிகழவுள்ளது. அன்றைய தினம், பூமியில் நிழலால் நிலவு ரத்த நிறத்தில் தென்படும். இந்த முழு கிரகணத்தை இந்தியாவில் இருந்து வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னையில் இரவு 11 மணிக்கு தொடங்கும் முழு கிரகணம், நள்ளிரவு 12.22 வரை நீடிக்கும். பகுதி கிரகணம் இரவு 8.58க்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை நீடிக்கும்.