News March 28, 2024
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன்பு வரக்கூடிய வியாழக்கிழமை கிறிஸ்தவர்களால் கட்டளை வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கட்டளை வியாழக்கிழமையான இன்று விருத்தாசலம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 13, 2026
வேலைவாய்ப்பு: கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இன்று (13.03.2026) காலை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர்: வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை குறைதீர் முகாம்

கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (14.3.2026) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்களிலும் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.