News February 12, 2025

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

image

கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் பூமிக்கு திரும்பவுள்ளார். மார்ச் 25ஆம் தேதிக்கு பதிலாக 12ஆம் தேதியே விண்ணில் ஏவப்படும் SpaceX விண்கலம், புட்ச் வில்மோர் & சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரவுள்ளது. இவர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டதற்கு காரணம் பைடன்தான் என்று USAவின் தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News February 12, 2025

மோடி மைதானத்தில் சாதனை படைத்த இந்திய அணி

image

அகமதாபாத் மோடி மைதானத்தில் ஒருநாள் போட்டியில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை இந்தியா (356/10), ENG எதிராக இன்று பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் தென்னாப்ரிக்கா அணி 2010இல் 365/2 ரன்கள் குவித்ததே இதுவரை அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. 2022இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 325/5 ரன்களும், 2022இல் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 324/4 ரன்களும் எடுத்துள்ளன.

News February 12, 2025

‘டிராகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

image

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

News February 12, 2025

தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

image

அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்துமதச் சடங்குகள், வேதங்களில் சிறந்தவரான அவர், தன் வாழ்நாளை ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார். ஆன்மிக மற்றும் சமூக வாழ்க்கையில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக்கூரப்படும் என்று உருக்கமாக தன் இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!