News February 12, 2025

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய L&T சேர்மன்

image

L&T சேர்மன் சுப்ரமணியம் மீண்டும் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களால், கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், இது நாட்டின் உட்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அவர் கூறியது சர்ச்சையானது.

Similar News

News March 11, 2026

பலாத்காரத்தால் 42 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்

image

நாட்டிலேயே முதல்முறையாக, 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த <<19352666>>ஹரிஷை<<>> கருணைக்கொலை செய்ய SC இன்று அனுமதி வழங்கியது. இதற்கு முன்பு நடந்த கருணைக் கொலை வழக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? 1973-ல் பாலியல் வன்கொடுமையால் கோமாவுக்கு சென்ற அருணாவை கருணைக்கொலை செய்ய அனுமதி 2011-ல் கோரப்பட்டது. அவர் 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்தும், கோர்ட் அதை ஏற்கவில்லை. இறுதியில் 2015-ல் நிமோனியா காய்ச்சலால் அவர் இயற்கை மரணமடைந்தார்.

News March 11, 2026

Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

image

பொதுவாக காய்கறிகள், சமைத்த உணவுகளை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு வைத்திருந்து பயன்படுத்துவோம். ஆனால், சில உணவுகளை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அவை என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

வங்கி கணக்கில் மேலும் ₹1,000.. ரங்கசாமி அறிவித்தார்

image

புதுச்சேரியில் மார்ச் 9-ம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ₹5,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ₹1,000 வழங்கும் திட்டத்தை CM ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி, புத்தகப் பை, காலணி வாங்குவதற்காக 80,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பெற்றோர்களின் வங்கி கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும் இத்திட்டம் வேண்டுமா?

error: Content is protected !!