News February 12, 2025

தப்பு செய்யும் தேர்தல் ஆணையம் : சி.வி.சண்முகம்

image

அதிமுக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு குறித்து பேசிய சி.வி.சண்முகம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். உட்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை விசாரணையில் தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அதிகார வரம்பை மீறி செயல்படும் EC, கட்சிக்கு தொடர்பற்ற தற்குறிகளின் மனுக்களை விசாரிக்கக் கூடாது என்றார்.

Similar News

News February 12, 2025

சபரிமலையில் நடை திறப்பு

image

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வரும் 17 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்காக செல்லலாம். மகர சங்கராந்தி முடிந்தும் கடைசி நாள் வரை பக்தர்கள் அதிகமாக திரண்டதால், மாத பூஜைக்காக திறந்திருக்கும் அடுத்த 5 நாட்களிலும் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 12, 2025

அமைச்சராவதில் SB-க்கு ஏன் இந்த அவசரம்? SC கேள்வி

image

ஜாமின் கிடைத்தவுடனே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன் என்று அவர் தரப்பிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அவர் மீண்டும் அமைச்சரானதை எதிர்த்து வித்யா குமார் என்பர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக இருக்கும் போது அமைச்சராக தொடர்வது தார்மீகமா? அமைச்சராக தொடர SB விரும்புகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

News February 12, 2025

நீங்க இதெல்லாம் போனில் பாக்குறீங்களா…

image

நீரின்றி அமையாது உலகு போல், இனி போன் இன்றி அமையாது நாளு. பிஸியாக வேலை பார்த்து பாத்தாலும், டக்கென 2 நிமிடம் போனை கையில் எடுக்காதவர்களே இல்லை. ஃப்ரியாக இருக்கும் போது, சிலர் அக்கடா என படுத்துட்டு ரீல்ஸ் பாப்பாங்க. சிலர் தூக்கம் வரும் வரை இரவில் தேவையில்லாமல் என்னமோ பார்த்துட்டு இருப்பாங்க. இது கண்களுக்கு பயங்கரமான Stressஐ கொடுக்கும். அப்படி எதை தான் பாத்துட்டு இருக்கீங்க?

error: Content is protected !!