News February 12, 2025
ஷாருக்கான் தான் அடுத்த அவெஞ்சர்: ஹாலிவுட் நடிகர்

பிப்.14ல் ரிலீசாக உள்ள ‘கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு’ படத்தில் கேப்டன் அமெரிக்கா கேரக்டரில் அந்தோனி மேக்கி நடித்துள்ளார். அவரிடம், அடுத்த அவெஞ்சர் ஹீரோவாக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ஷாருக்கான் பெயரைக் கூறி, அவர் தான் பொருத்தமாக இருப்பார் என தெரிவித்துள்ளார். மார்வெல் நிறுவனத்தின் சாய்ஸ் லிஸ்ட்டில் எப்போதும் ஷாருக்கான் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 19, 2026
HDFC சேர்மன் பதவி விலகினார்.. மிகப்பெரிய இழப்பு!

HDFC வங்கியின் பகுதிநேர சேர்மன் அசோக் சக்ரவர்த்தியின் ராஜினாமா பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘நிஃப்டி50’-ல் முன்னணி வகிக்கும் HDFC-யின் பங்குகள் 5% சரிவை சந்தித்ததுடன், நிஃப்டியும் 2.5% சரிந்துள்ளது. நிறுவனத்தின் அண்மை செயல்பாடுகள், தனது தனிப்பட்ட விழுமியங்கள் & அறநெறிகளுடன் ஒத்துப்போகாததால் விலகியதாக அவர் கூறியுள்ளது, முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பாதித்துள்ளதே சரிவுக்கு காரணம்.
News March 19, 2026
+2 மாணவி வன்கொடுமை: இளைஞர் அதிரடி கைது

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறி 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News March 19, 2026
‘ஆதவ் அர்ஜுனாவை உடனே நீக்குக’

தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் ஆதவ் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதாக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சாடியுள்ளார். விஷக்கிருமி போன்ற ஆதவ் அர்ஜுனா எந்த கட்சிக்கு சென்றாலும், அக்கட்சியின் தலைவரை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை அடைய நினைப்பார். எனவே, ஆதவ் அர்ஜுனா போன்ற புற்றுநோய் செல்களை உடனே நீக்க வேண்டும் என்று விஜய்க்கு மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளார்.


