News February 12, 2025
பணிச் சுமையா… இது தான் ஒரே தீர்வு?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739337912556_1231-normal-WIFI.webp)
தற்போதைய WorkLifeல் பலரும் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். இதனால் செய்யும் வேலையிலும் தவறிழைப்பதாக நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பணிச்சுமையால் மகிழ்ச்சியை இழந்து, தனிப்பட்ட வாழ்விலும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக எச்சரிக்கிறார்கள். இதற்கு தீர்வாக, அவ்வப்போது விடுமுறைகள் எடுத்துக்கொண்டும், பிடித்தமானவர்களுடன் நேரத்தை செலவு செய்யவும் அவர் வலியுறுத்துகிறார்.
Similar News
News February 12, 2025
9 கிரகமும் ஒன்றாய் காண…
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737512046618_1153-normal-WIFI.webp)
பிள்ளையார்பட்டி பாடல் வரிகளைப் போல, 7 கோள்களையும் (பூமியைத் தவிர) ஒரே நேரத்தில் வானில் பார்க்கும் அரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆம், பிப்ரவரி 28ஆம் தேதி இரவு அனைத்துக் கோள்களும் ஒரே நேரத்தில் வானில் தோன்றும். இதில், யுரேனஸ், நெப்டியூன் தவிர மற்ற 5 கோள்களையும் வெறும் கண்களாலே பார்க்கலாம். அவை இரண்டையும் பார்க்க டெலெஸ்கோப் தேவை. இதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் 2028ஆம் ஆண்டுதான் நிகழும்.
News February 12, 2025
மொபைல எடுங்க… 14417 நம்பர தட்டுங்க!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737997258043_347-normal-WIFI.webp)
பள்ளிகளில் மாணவ- மாணவியர் பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளானால், 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புகார் அளிப்பவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படும் என்றும், மாணவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளிகளில் பாலியல் புகார் எழுந்துள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News February 12, 2025
மிடில் ஆர்டரில் உயிர் பெற்ற இந்திய அணி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739361272223_1231-normal-WIFI.webp)
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு வீரர்கள் இன்று பேட்டால் பதிலளித்தனர். இந்த மேட்ச்சில், 356 ரன்களை குவிக்க மிடில் ஆர்டரே காரணம். கில் 112 ரன்கள், கோலி 52 ரன்கள், ஸ்ரேயஸ் ஐயர் 78 ரன்கள், கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்து அவுட்டாகினார். அணியின் மொத்த ஸ்கோரில் இவர்கள் மட்டுமே 282 ரன்களை அடித்து விட்டார்கள். இதே ஃபார்ம் தொடர்ந்தால், சாம்பியன்ஸ் டிராபி எளிது!