News February 12, 2025

இதயம் நொறுங்கிய சிராஜ்!!

image

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூக்கு இடம் இல்லை. அணியில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். இதனையடுத்து, சிராஜ் இன்ஸ்டாவில் ஹார்ட் பிரேக் எமோஜியை மட்டும் வைத்து ஸ்டோரி போட்டுள்ளார். நெட்டிசன்கள் சிராஜூக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். நீங்க என்ன சொல்றீங்க..?

Similar News

News February 12, 2025

நாட்டின் பணவீக்கம் குறைந்தது

image

ஜனவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் 4.31 சதவீதமாகக் குறைந்துள்ளது. டிசம்பர் மாதம் இது 5.22 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால், ஜனவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கொரோனாவுக்குப் பின் 8 சதவீதம் வரை உயர்ந்த சில்லரை பணவீக்கம், 4.31 சதவீதமாக குறைந்திருப்பது மக்களுக்கு நற்செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

News February 12, 2025

பணவீக்கம் என்றால் என்ன?

image

நீங்கள் கடந்த ஆண்டு ₹100க்கு வாங்கிய ஒரு பொருள், இந்த ஆண்டு எவ்வளவு ரூபாய் உயருகிறதோ, அதுவே பணவீக்கம் ஆகும். இந்தியாவில் இது சராசரியாக 4% முதல் 6% வரை இருக்கும். இதனை சில்லரை பணவீக்கம், மொத்த பணவீக்கம், நுகர்வோர் பணவீக்கம் என்று பிரித்து RBI கணக்கிடுகிறது. வட்டி விகிதம், பணப்புழக்கம் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் வைக்கிறது.

News February 12, 2025

9 கிரகமும் ஒன்றாய் காண…

image

பிள்ளையார்பட்டி பாடல் வரிகளைப் போல, 7 கோள்களையும் (பூமியைத் தவிர) ஒரே நேரத்தில் வானில் பார்க்கும் அரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆம், பிப்ரவரி 28ஆம் தேதி இரவு அனைத்துக் கோள்களும் ஒரே நேரத்தில் வானில் தோன்றும். இதில், யுரேனஸ், நெப்டியூன் தவிர மற்ற 5 கோள்களையும் வெறும் கண்களாலே பார்க்கலாம். அவை இரண்டையும் பார்க்க டெலெஸ்கோப் தேவை. இதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் 2028ஆம் ஆண்டுதான் நிகழும்.

error: Content is protected !!