News February 12, 2025

DP-யை மாற்றிய இபிஎஸ்

image

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், இபிஎஸ்-க்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. MGR, ஜெ., போட்டோக்கள் இடம்பெறாததாலும், கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தன்னிடம் கருத்து கேட்காததாலும், இபிஎஸ் பங்கேற்ற நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தார். தற்போது நீதிமன்ற தீர்ப்பும் எதிராக வந்துள்ள நிலையில், இபிஎஸ் தனது எக்ஸ் முகப்பு பக்கத்தில் MGR, ஜெ., உடன் இருக்கும் போட்டோவை DPஆக வைத்துள்ளார்.

Similar News

News February 12, 2025

கும்பமேளாவில் புனித நீராடிய கஸ்தூரி!

image

உ.பி.யில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு சென்ற நடிகை கஸ்தூரி, அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடினார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மகன் சங்கல்ப் ரவிக்குமாருடன் புனித நீராடிய புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

News February 12, 2025

புதிய சாதனை படைத்த சுப்மன் கில்

image

அகமதாபாத் மோடி மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதே மைதானத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு நியூசி. அணிக்கு எதிராக டி20 போட்டியில் 126 ரன்களையும், ஆஸி. அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 128 ரன்களையும் எடுத்திருந்தார். இதற்குமுன், PAK வீரர் பாபர் அசாம் உள்ளிட்ட 4 வீரர்கள் இதேபோன்ற சாதனையைப் இதற்குமுன் படைத்துள்ளனர்.

News February 12, 2025

இன்று Ice Moon பார்க்கலாம். ஏன் தெரியுமா?

image

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தோன்றும் பௌர்ணமி நிலவை Snow Moon என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அழைக்கின்றனர். பெரும்பாலும் இந்த மாதத்தில்தான் அங்கு பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்தது. இதனை சிலர், Storm Moon என்றும், சிலர் Ice Moon என்றும் அழைக்கின்றனர். இன்றுதான் பௌர்ணமி நிலவு முழுமையாகக் காட்சியளிக்கவுள்ளது. கண்டு களியுங்கள் மக்களே.

error: Content is protected !!