News February 12, 2025
பிரதமர் விமானம் மீது தீவிரவாத தாக்குதல் மிரட்டல்
பிரதமர் மோடியின் USA பயணத்திற்கு முன்னதாக, அவரது விமானம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மும்பை போலீசாருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், மிரட்டல் அழைப்பு விடுத்தவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பிரான்ஸில் இருக்கும் பிரதமர் நாளை USA செல்கிறார்.
Similar News
News February 12, 2025
புதிய சாதனை படைத்த சுப்மன் கில்
அகமதாபாத் மோடி மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதே மைதானத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு நியூசி. அணிக்கு எதிராக டி20 போட்டியில் 126 ரன்களையும், ஆஸி. அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 128 ரன்களையும் எடுத்திருந்தார். இதற்குமுன், PAK வீரர் பாபர் அசாம் உள்ளிட்ட 4 வீரர்கள் இதேபோன்ற சாதனையைப் இதற்குமுன் படைத்துள்ளனர்.
News February 12, 2025
இன்று Ice Moon பார்க்கலாம். ஏன் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தோன்றும் பௌர்ணமி நிலவை Snow Moon என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அழைக்கின்றனர். பெரும்பாலும் இந்த மாதத்தில்தான் அங்கு பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்தது. இதனை சிலர், Storm Moon என்றும், சிலர் Ice Moon என்றும் அழைக்கின்றனர். இன்றுதான் பௌர்ணமி நிலவு முழுமையாகக் காட்சியளிக்கவுள்ளது. கண்டு களியுங்கள் மக்களே.
News February 12, 2025
கமலுடன் அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு இன்று சந்தித்துப் பேசினார். திமுக சார்பில் கமல்ஹாசன் கட்சிக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக மக்களவைத் தேர்தலின் போது உடன்பாடு எட்டப்பட்டது. ராஜ்யசபா தேர்தல் வரும் ஜூலையில் நடைபெறவுள்ள நிலையில், தற்போதையை அரசியல் சூழ்நிலை மற்றும் எம்.பி. சீட் தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.