News February 12, 2025

செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?

image

அதிமுக உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ் பாராட்டு விழாவை அவர் புறக்கணித்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Similar News

News February 12, 2025

நீங்க இதெல்லாம் போனில் பாக்குறீங்களா…

image

நீரின்றி அமையாது உலகு போல், இனி போன் இன்றி அமையாது நாளு. பிஸியாக வேலை பார்த்து பாத்தாலும், டக்கென 2 நிமிடம் போனை கையில் எடுக்காதவர்களே இல்லை. ஃப்ரியாக இருக்கும் போது, சிலர் அக்கடா என படுத்துட்டு ரீல்ஸ் பாப்பாங்க. சிலர் தூக்கம் வரும் வரை இரவில் தேவையில்லாமல் என்னமோ பார்த்துட்டு இருப்பாங்க. இது கண்களுக்கு பயங்கரமான Stressஐ கொடுக்கும். அப்படி எதை தான் பாத்துட்டு இருக்கீங்க?

News February 12, 2025

நாட்டின் பணவீக்கம் குறைந்தது

image

ஜனவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் 4.31 சதவீதமாகக் குறைந்துள்ளது. டிசம்பர் மாதம் இது 5.22 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால், ஜனவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கொரோனாவுக்குப் பின் 8 சதவீதம் வரை உயர்ந்த சில்லரை பணவீக்கம், 4.31 சதவீதமாக குறைந்திருப்பது மக்களுக்கு நற்செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

News February 12, 2025

பணவீக்கம் என்றால் என்ன?

image

நீங்கள் கடந்த ஆண்டு ₹100க்கு வாங்கிய ஒரு பொருள், இந்த ஆண்டு எவ்வளவு ரூபாய் உயருகிறதோ, அதுவே பணவீக்கம் ஆகும். இந்தியாவில் இது சராசரியாக 4% முதல் 6% வரை இருக்கும். இதனை சில்லரை பணவீக்கம், மொத்த பணவீக்கம், நுகர்வோர் பணவீக்கம் என்று பிரித்து RBI கணக்கிடுகிறது. வட்டி விகிதம், பணப்புழக்கம் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் வைக்கிறது.

error: Content is protected !!