News February 12, 2025
படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலி
லிபியா அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 63 பேர் பயணம் செய்த படகிலிருந்து இதுவரை 33 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் மாயமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய படகில் பயணம் செய்தவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், சட்டவிரோதமாகக் குடியேற முயன்றபோது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News February 12, 2025
இன்று Ice Moon பார்க்கலாம். ஏன் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தோன்றும் பௌர்ணமி நிலவை Snow Moon என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அழைக்கின்றனர். பெரும்பாலும் இந்த மாதத்தில்தான் அங்கு பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்தது. இதனை சிலர், Storm Moon என்றும், சிலர் Ice Moon என்றும் அழைக்கின்றனர். இன்றுதான் பௌர்ணமி நிலவு முழுமையாகக் காட்சியளிக்கவுள்ளது. கண்டு களியுங்கள் மக்களே.
News February 12, 2025
கமலுடன் அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு இன்று சந்தித்துப் பேசினார். திமுக சார்பில் கமல்ஹாசன் கட்சிக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக மக்களவைத் தேர்தலின் போது உடன்பாடு எட்டப்பட்டது. ராஜ்யசபா தேர்தல் வரும் ஜூலையில் நடைபெறவுள்ள நிலையில், தற்போதையை அரசியல் சூழ்நிலை மற்றும் எம்.பி. சீட் தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.
News February 12, 2025
புதிய மைல்கல்லை எட்டிய ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல்
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது.