News February 12, 2025

BREAKING: அதிமுக வழக்கில் தீர்ப்பு

image

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ரவீந்திரநாத், புகழேந்தி மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 18, 2026

2-ம் கட்ட வேட்பாளர்கள் தேர்வில் தவெக தீவிரம்

image

சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலையில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தவெக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே முதற்கட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணலை விஜய் முடித்த நிலையில், 60 வேட்பாளர்கள் அதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்தாக 2-ம் கட்ட நேர்காணல் நேற்று நடத்து முடிந்ததையடுத்து அடுத்த பட்டியலை தேர்வு செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது.

News March 18, 2026

புதியவர்களால் EPS-க்கு அச்சம் வந்துவிட்டது; ரகுபதி

image

தனது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்து கொள்வது மட்டுமே EPS-ன் ஒரே இலக்கு என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனற எண்ணம் EPS-க்கு இல்லை என்றும் நிறைய புதிய போட்டியாளர்கள் வந்திருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு வந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தைகூட சரியாக நடத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News March 18, 2026

கண் பார்வையை கூர்மையாக்க இதுதான் பெஸ்ட்!

image

டிஜிட்டல் யுகத்தில் 6 வயதிலேயே குழந்தைகள் கண்ணாடி போடுவதை பார்க்க முடிகிறது. ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தின் மூலமாக கண் பார்வை பாதிப்பை தடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கண் பார்வையை கூர்மையாக்க உதவும் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளின் பட்டியல் மேலே போட்டோஸாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை SWIPE செய்து பாருங்கள்.

error: Content is protected !!