News February 12, 2025

டிப்ளமோ முடித்தவர்களுக்கு HP நிறுவனத்தில் வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

Similar News

News September 30, 2025

மறைமலைநகர் அருகே பயங்கர தீ விபத்து

image

மறைமலைநகர் அருகே இயங்கி வந்த தனியார் பாலிதீன் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று மின்சாரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இத்தீ விபத்தில் நிறுவனத்தின் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

News September 30, 2025

செங்கல்பட்டு: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News September 30, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!