News March 28, 2024

பிறரை துன்புறுத்துவதே காங்கிரஸின் கலாசாரம்

image

பிறரை துன்புறுத்துவதும், கொடுமைப்படுத்துவதும் காங்கிரஸின் கலாசாரம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டுள்ள மோடி, காங்கிரஸ் தனது சுயநலத்திற்காக பிறரது அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், 140 கோடி இந்தியர்களும் காங்கிரஸை நிராகரிப்பதில் ஆச்சரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 17, 2026

விவாகரத்து.. த்ரிஷா ஓபன் டாக் VIRAL

image

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கிற்கிடையே, த்ரிஷாவின் பதிவுகள் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், 2016-ல் விவாகரத்து பற்றி த்ரிஷா பேசியது தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், விவாகரத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என கூறியுள்ளார். மேலும் தான் திருமணம் செய்வதற்கு முன்பு 100 முறை யோசிப்பேன், ஏனென்றால் தான் வேறொருவரை காயப்படுத்தவோ (அ) மகிழ்ச்சியில்லா வாழ்க்கையை வாழவோ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

தவெகவில் இணைந்தார் மதிமுக மாவட்டச் செயலாளர்

image

தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், மதிமுக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் சங்கேஷ்வரன் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். அதேபோல், சேலம் மாநகர செயலாளர் அருள்மாது, மாவட்ட பிரதிநிதிகள், ரஜினிகாந்த், நாகேந்திரன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களை அருண்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

News March 17, 2026

மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

image

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல்லை நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!