News February 12, 2025

இன்று ஹக் டே: உன்னை மட்டும் கட்டிக்கொண்டு வாழ சம்மதம்

image

இன்று Hug day. காதலை வெளிப்படுத்த இதை விட சிறப்பான வழி உண்டோ! மன அழுத்தத்தை குறைக்கும் ஒருவித மருந்தாகும் இந்த Hug. அன்பாக பேசும் 100 வார்த்தைகளுக்கு ஒரு ஹக் சமம். எண்ணற்ற உணர்ச்சிகளை – அன்பு, ஆறுதல், ஆதரவு மற்றும் புரிதல் என அனைத்தையும் ஒரு ஹக்கில் சொல்லிவிடலாம். கட்டிப்பிடிப்பதன் மூலம் ‘காதல் ஹார்மோன்’ ஆக்ஸிடோசின் வெளியாகி காதலர்களுக்குள் இன்னும் இணைப்பை வலுபெற செய்கிறதாம்.

Similar News

News February 12, 2025

புதிய மைல்கல்லை எட்டிய ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல்

image

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது.

News February 12, 2025

மாணவர்களை நிர்வாணமாக்கி ராகிங் கொடுமை

image

கேரளா, கோட்டயத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் நடந்துள்ள ராகிங் கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்சிங் 1st yr மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள், அவர்களை நிர்வாணப்படுத்தியும், அந்தரங்க உறுப்பில் தம்புள்ஸ் தொங்கவிட்டும், காம்பஸால் குத்தியும் கொடுமை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோ எடுத்தும் பிளாக்மெயில் செய்துள்ளனர். மாணவர்கள் புகாரால், தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

News February 12, 2025

தமிழகத்தில் SC, ST மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

image

தமிழகத்தில் 2020-22 கால கட்டங்களில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது, லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டு 1,274 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது 2021ஆம் ஆண்டு 1,377ஆக அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில், 15,368 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

error: Content is protected !!