News March 28, 2024

டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி. ஜெய்பூரில் முதலில் பேட்டிங் செய்த RR அணி 185/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் மட்டும் 84 ரன்கள் குவித்தார். குறிப்பாக நோர்க்யா வீசிய கடைசி ஓவரில் 4 4 6 4 6 என 25 ரன்களை அவர் விளாசினார். டெல்லி தரப்பில் கலீல், முகேஷ், நோர்க்யா, அக்‌ஷர், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Similar News

News October 29, 2025

SK பட இயக்குநருடன் இணையும் சூரி

image

நடிகர் சூரி அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில், ‘நேற்று இன்று நாளை’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. சூரி தற்போது ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘செல்ஃபி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

News October 29, 2025

ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்

image

*மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.
*நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
*நீங்கள் எப்போதும் கோபமாக புகார் கூறிக் கொண்டே இருந்தால், உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.
*‘அறியாமை’ என்பது அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல, அது அறிவின் மாயையே ஆகும்.
*யார் விதியும் இங்கு எழுதப்படவில்லை.

News October 29, 2025

தோல்வி பயத்தில் CM ஸ்டாலின்: நயினார்

image

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் SIR குறித்து மடைமாற்றும் வேலையில CM ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். முதலில் CAA, அடுத்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தற்போது SIR என முன்னுக்கு பின்னாக மாறிமாறி பேசுவதாகவும் சாடியுள்ளார். SIR-ஐ எதிர்த்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை நாளை நடத்தப்போவதாக CM அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!