News February 12, 2025

 கள்ளக்குறிச்சியில் புத்தக கண்காட்சி

image

கள்ளக்குறிச்சி துருகம் சாலை வி.எம்.திடலில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நுாலக இயக்ககம் சார்பில் 3வது கல்லை புத்தகத் திருவிழா வரும் 14ம் தேதி துவங்கி, 23 வரை நடக்கிறது. இதில் அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் முன்னணி நிறுவன பதிப்பகத்தாரின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

தியாகதுருகத்தில் துடிதுடித்து பலி!

image

தியாகதுருகம்: சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (33). நேற்று முன்தினம் சொந்த வேலையாக கள்ளக்குறிச்சி வந்த அவர், பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது நாகலூர் அரசு பள்ளி அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறிஇறங்கிய போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News March 4, 2026

இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது

image

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. “இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது” குயிலி தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News March 4, 2026

2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம்

image

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் (மார்ச்.3) நடைபெற்றது. இதில் மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!