News February 12, 2025
பாலியல் புகாரில் சிக்கிய 255 ஆசிரியர்கள்

கடந்த 10 ஆண்டுகளில் 255 ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர். தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக் கல்வித்துறையில் 175 ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் தவறிழைத்த ஆசிரியர்கள் மீது அரசாணை எண் 121இன் படி பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் உடனான ஆலோசனைக்குப் பிறகு வரும் மார்ச் மாதமே இதனை அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 10, 2025
தமிழக பள்ளிகளில் PUBLIC EXAM இந்த ஆண்டு முதல் ரத்து

மாநில கல்விக் கொள்கையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கல்வி வாரிய கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தாண்டு முதல் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை அமல்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10, +2 மாணவர்களுக்கு வழக்கம்போல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
News September 10, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தியது. இன்று நடந்த சூப்பர்-4 சுற்றில் பலமான தெ.கொரியாவுடன் மோதிய இந்திய அணி 4- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக வலம்வரும் இந்தியா, அடுத்து சீனாவை எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பையை வென்றால் 2026 உலகக் கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதிபெறும். அட்வான்ஸ் வாழ்த்துகள்!
News September 10, 2025
SCIENCE: டாக்டர்கள் நாக்கை நீட்ட சொல்வது ஏன் தெரியுமா?

உடலில் எந்த பிரச்னை என்றாலும் அதை கண்ணாடி போல் நமது நாக்கு காட்டிவிடுமாம். உதாரணத்துக்கு, நாக்கு மஞ்சளாக இருந்தால் நீர்சத்து குறைபாடு, நாக்கின் நுனி மட்டும் சிவப்பாக இருந்தால் மன அழுத்தம், நாக்கு வெள்ளையாக இருந்தால் நோய்தொற்று, அடி நாக்கு சிவப்பாக இருந்தால் சுவாசப் பிரச்னைகள் இருப்பதாக அர்த்தமாம். இதனால்தான் ஹாஸ்பிடலுக்கு சென்றாலே நாக்கை காட்டும்படி மருத்துவர் கேட்கிறார். SHARE.