News March 28, 2024

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா!

image

பெங்களூருவில் உள்ள சினிமா தியேட்டருக்கு லேப்டாப்புடன் சென்ற நபர், கடமை உணர்ச்சியுடன் வேலை செய்துகொண்டே சினிமா பார்க்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வேலை – சமநிலை குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. ரிஷிகா தனது X பக்கத்தில், ‘நேற்று சினிமாவுக்கு சென்றிருந்தேன். யாரோ ஒருவர், படம் முழுக்க லேப்டாப்பும் கையுமாக இருந்தார்’ என பதிவிட்டார். இதற்கு கலவையான விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News

News October 29, 2025

தோல்வி பயத்தில் CM ஸ்டாலின்: நயினார்

image

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் SIR குறித்து மடைமாற்றும் வேலையில CM ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். முதலில் CAA, அடுத்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தற்போது SIR என முன்னுக்கு பின்னாக மாறிமாறி பேசுவதாகவும் சாடியுள்ளார். SIR-ஐ எதிர்த்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை நாளை நடத்தப்போவதாக CM அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

News October 29, 2025

செமி ஃபைனலில் ஆஸி., மகளிர் அணி கேப்டன்?

image

ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி காயம் காரணமாக, இங்கி., & தெ.ஆப்பிரிக்கா உடனான லீக் போட்டியில் விளையாடவில்லை. ஓய்வில் இருந்த அவர், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் நாளை (அக்.30) நடைபெறவுள்ள இந்தியா உடனான அரையிறுதி போட்டியில் அலீஸா பங்கேற்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. லீக்கில் ஆஸி., உடன் தோல்வியுற்ற இந்தியா, செமி ஃபைனலில் வெற்றியை நோக்கி போராடும்.

News October 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 503 ▶குறள்: அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. ▶பொருள்: அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

error: Content is protected !!