News February 12, 2025
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி: போலீஸ் விசாரணை

கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சொந்தமான ரிக் வண்டி வைத்துள்ளார். இவரிடம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நாகேஷ் வேலை பார்த்து வந்தார். நேற்று ரிக் வண்டியில் இருந்து இரும்பு கம்பிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இரும்பு கம்பியானது உயர் மின் அடுத்த கம்பியில் உரசியதால் தூக்கி வீசப்பட்ட நாகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்து நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 11, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

அத்தனூர், வனவியல் விரிவாக்க மையம் சார்பில் நாமக்கல்லில் உள்ள தனியார் நிலங்களில் ஓராண்டுக்கு மேல் தரிசாக விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத நிலங்களிலும், மற்ற விவசாயி நிலங்களின் வயல் முழுவதும், வரப்பு பகுதியிலும் மகாகனி, தேக்கு, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல இன செடிகள் இலவசமாக நடவு செய்து தரப்பட உள்ளது. ஆகவே, ஆர்வமுள்ள விவசாயிகள் 8940133289, 9751051006 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
News November 10, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படவுள்ளது. எனவே, இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை (ம) தோட்டக்கலை அலுவலகத்தையோ (அ) பொது சேவை மையத்திலோ ஆதார் எண், சிட்டா, தொலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு உடனடியாக பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 10, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்!

நாமக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்கள் அரசின் இலவச தையல் மிஷின் பெற உரிய ஆவணங்களுடன் நவ.25ந் தேதிக்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு (ம) அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாத தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 40.


