News February 12, 2025

திருநெல்வேலியில் இன்றைய நிகழ்ச்சிகள் விவரம்

image

#இன்று(பிப்ரவரி 12) காலை 10 மணிக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10.30 மணிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்கலன் வண்டிகளை வழங்கும் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.

Similar News

News March 8, 2026

திருநெல்வேலி: ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. 20 – 25 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் <>LINK<<>> விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 8, 2026

திருநெல்வேலி கலெக்டர் அதிரடி!

image

சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 7 பிடிஓ பணியிட மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் சுகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அம்பை பிடிஓ பொன்னுலட்சுமி நெல்லை தெற்கு உதவி இயக்குனர் பி டி ஓவாக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியில் இருந்த உலகம்மாள் அம்பைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். வள்ளியூர் பிடிஓ மனோகர் மானூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

News March 8, 2026

திருநெல்வேலி: கார் விபத்தில் திமுக நிர்வாகி பலி

image

தாழையூத்தை அடுத்த சங்கர் நகர் சாரதாம்பாள் நகரை சேர்ந்த ராஜா மணி. (பேரூா் திமுக அவைத்தலைவர்) நேற்று முந்தினம் இரவு அங்குள்ள நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பால பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயம் அடைந்தார். பாளை GH-ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராஜாமணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!