News February 12, 2025
புதிய அணிகளால் சர்ச்சையில் விஜய்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739328679845_55-normal-WIFI.webp)
TVKவில் உருவாக்கப்பட்ட புதிய அணிகளால் விஜய் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். திருநர் என்ற அணி ‘9’-வது இடத்தில் இருந்தது சர்ச்சையான நிலையில், தற்போது குழந்தைகள் அணி தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி சிறுவர்களை பரப்புரை போன்றவற்றில் ஈடுபடுத்தக்கூடாது. அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் குழந்தைகள் அணி உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் என்ன? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News February 12, 2025
“பணக் கொழுப்பு” சீமான் சர்ச்சை பேச்சு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1738044535706_1204-normal-WIFI.webp)
விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு, “பணக்கொழுப்பு அதிகம் இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள்” என சீமான் பதிலளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் தொடர்பான சர்ச்சையே இன்னும் முடியவில்லை. இதனால் ஏற்கெனவே திமுக, பெரியாரிஸ்டுகள் சீமானை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், தவெக தொண்டர்களும் எதிராக திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
News February 12, 2025
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய L&T சேர்மன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739345220195_1173-normal-WIFI.webp)
L&T சேர்மன் சுப்ரமணியம் மீண்டும் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களால், கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், இது நாட்டின் உட்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அவர் கூறியது சர்ச்சையானது.
News February 12, 2025
3வது ODI: இந்திய அணி பேட்டிங்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739344079412_1231-normal-WIFI.webp)
குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 3வது ODIல் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய பிளேயிங் XI: ரோஹித், கில், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சுந்தர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங். ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இங்கிலாந்தை white wash செய்யுமா?