News February 12, 2025

டான் படத்தின் காப்பியா டிராகன்?

image

‘டிராகன்’ படம் கண்டிப்பாக ‘டான்’ படத்தின் காப்பி இல்லை என அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விளக்கமளித்துள்ளார். 2 ஆண்டுக்கு முன் வந்த படத்தை எப்படி அப்படியே காப்பி அடிக்க முடியும் எனவும், டிரெய்லர் கட்ஸ் வேண்டுமானால், அப்படத்தை ஞாபகப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், டிராகன் படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 12, 2025

இதயம் நொறுங்கிய சிராஜ்!!

image

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூக்கு இடம் இல்லை. அணியில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். இதனையடுத்து, சிராஜ் இன்ஸ்டாவில் ஹார்ட் பிரேக் எமோஜியை மட்டும் வைத்து ஸ்டோரி போட்டுள்ளார். நெட்டிசன்கள் சிராஜூக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். நீங்க என்ன சொல்றீங்க..?

News February 12, 2025

DP-யை மாற்றிய இபிஎஸ்

image

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், இபிஎஸ்-க்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. MGR, ஜெ., போட்டோக்கள் இடம்பெறாததாலும், கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தன்னிடம் கருத்து கேட்காததாலும், இபிஎஸ் பங்கேற்ற நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தார். தற்போது நீதிமன்ற தீர்ப்பும் எதிராக வந்துள்ள நிலையில், இபிஎஸ் தனது எக்ஸ் முகப்பு பக்கத்தில் MGR, ஜெ., உடன் இருக்கும் போட்டோவை DPஆக வைத்துள்ளார்.

News February 12, 2025

கிரிக்கெட்டின் ரொனால்டோ பும்ரா: ஹார்மிசன்

image

பும்ரா இல்லாமல் CTக்கு செல்வது, ரொனால்டோ இல்லாமல் ஃபுட்பால் WCக்கு செல்வது போன்றது என ENG முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ளார். பும்ராவிற்கு மாற்று வீரரை கண்டறிய முடியாது எனவும், அவர் இல்லையென்றால் அது 14 பேர் கொண்ட அணியாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளார். தான் மட்டும் தேர்வாளராக இருந்தால், ஃபைனல் அன்று காலையில் அவரை அணியில் சேர்த்துவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!