News February 12, 2025

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரோகித், கோலி

image

IND – ENG இடையிலான 3rd ODI, இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ரோகித் 13 ரன்கள் எடுத்தால் ODIயில் 11,000 ரன்களையும், கோலி 89 ரன்கள் எடுத்தால் 14,000 ரன்களையும் கடப்பார்கள். கடந்த சில போட்டிகளில் ரோகித், கோலி பேட்டிங் மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதற்கு கடைசி போட்டியில் ரோகித் பதிலடி கொடுத்த நிலையில், இன்றைய போட்டியில் கோலி பதிலடி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 12, 2025

பணிச் சுமையா… இது தான் ஒரே தீர்வு?

image

தற்போதைய WorkLifeல் பலரும் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். இதனால் செய்யும் வேலையிலும் தவறிழைப்பதாக நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பணிச்சுமையால் மகிழ்ச்சியை இழந்து, தனிப்பட்ட வாழ்விலும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக எச்சரிக்கிறார்கள். இதற்கு தீர்வாக, அவ்வப்போது விடுமுறைகள் எடுத்துக்கொண்டும், பிடித்தமானவர்களுடன் நேரத்தை செலவு செய்யவும் அவர் வலியுறுத்துகிறார்.

News February 12, 2025

இதயம் நொறுங்கிய சிராஜ்!!

image

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூக்கு இடம் இல்லை. அணியில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். இதனையடுத்து, சிராஜ் இன்ஸ்டாவில் ஹார்ட் பிரேக் எமோஜியை மட்டும் வைத்து ஸ்டோரி போட்டுள்ளார். நெட்டிசன்கள் சிராஜூக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். நீங்க என்ன சொல்றீங்க..?

News February 12, 2025

DP-யை மாற்றிய இபிஎஸ்

image

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், இபிஎஸ்-க்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. MGR, ஜெ., போட்டோக்கள் இடம்பெறாததாலும், கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தன்னிடம் கருத்து கேட்காததாலும், இபிஎஸ் பங்கேற்ற நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தார். தற்போது நீதிமன்ற தீர்ப்பும் எதிராக வந்துள்ள நிலையில், இபிஎஸ் தனது எக்ஸ் முகப்பு பக்கத்தில் MGR, ஜெ., உடன் இருக்கும் போட்டோவை DPஆக வைத்துள்ளார்.

error: Content is protected !!