News February 12, 2025
பெரிய படங்களை பார்த்து ஏமாற்றமடைந்தேன்: ரெஜினா

பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள், ஸ்டார் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார். பல பெரிய படங்களில் பெண் கேரக்டர்கள் மோசமாக எழுதப்பட்ட விதத்தால் ஏமாற்றமடைந்ததாகவும், ஒரு படத்தில் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அந்த படத்தின் கதையின் வலிமையை உணரலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 15, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹5,000.. ECI அதிரடி

TN அரசு மகளிருக்கு ₹5,000 கொடுத்தது தவறில்லை என CEC ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் தேதி அறிவிப்பின்போது, தமிழகத்தில் மகளிர் வங்கி கணக்கில் அரசு ₹5,000 டெபாசிட் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்கலாம் என அவர் விளக்கம் அளித்தார். அசாமிலும் மகளிருக்கு அம்மாநில அரசு ₹9,000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.
News March 15, 2026
அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச் செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி கிடையாது என ECI அறிவித்துள்ளது. இதற்காக வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன் டெபாசிட் மையம் அமைக்கப்படும். அங்கு செல்போனை ஒப்படைத்த பிறகே வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்களித்த பிறகு செல்போனை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
News March 15, 2026
2021 தேர்தல் களம் எப்படி இருந்தது? REWIND

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது வரை நான்குமுனை போட்டியாக உள்ள தேர்தல் களத்தில் யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்று மே 4-ம் தேதி தெரிந்துவிடும். இந்நிலையில், 2021 தேர்தல் களம் எப்படி இருந்தது, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த சீட்கள், வாக்கு சதவீதம், வாக்காளர்கள் எண்ணிக்கை போன்றவற்றை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். SHARE


