News February 12, 2025
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊக்கத்திட்டம்

தருமபுரியில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை உயர்திறன் ஊக்கத்திட்டத்தின் (Skill Development) கீழ் சமூகத்திலிருந்து வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக பணம் உறுதியாவணம் (Skill Voucher) வழங்கப்பட உள்ளது. இந்த மூலம் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ₹12,000, ₹15,000 மற்றும் ₹25,000 ஆகிய 3 பிரிவின்கீழ் நிதி கிடைக்கும்.
Similar News
News April 21, 2025
தருமபுரியில் வாட்டி வதைக்கும் வெயில்

தருமபுரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி.. இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே <
News April 21, 2025
ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

செங்கல்பட்டை சேர்ந்த முருகேசன் திருக்கழுக்குன்றம் கிராம அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த நிலையில் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறை மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.