News February 12, 2025

இன்று 3வது ODI: அணியில் பந்த், அர்ஷ்தீப்?

image

IND VS ENG அணிகள் மோதும் 3வது ODI இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. IND இறுதி அணியில் ராகுல், ஹர்ஷித்துக்கு பதிலாக பந்த், அர்ஷ்தீப் வர வாய்ப்புள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடினமாகவும், பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என்றும், பனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Sports 18-2, ஹாட்ஸ்டாரில் பிற்பகல் 1.30 மணி முதல் LIVEல் பார்க்கலாம். WAY2NEWSல் லைவ் ஸ்கோர் அப்டேட்களைப் பெறலாம்.

Similar News

News February 12, 2025

BREAKING: அதிமுக வழக்கில் தீர்ப்பு

image

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ரவீந்திரநாத், புகழேந்தி மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News February 12, 2025

காதலர் தினத்தில் 10 படங்கள் ரிலீஸ்

image

காதலர் தினத்தை முன்னிட்டு 10 படங்கள் ரிலீசாகவுள்ளன. ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, ஃபயர், அது வாங்கினால் இது இலவசம், தினசரி, படவா, காதல் என்பது பொதுவுடைமை, கண் நீரா, 9 ஏஎம் 9 பிஎம், டப்பிங் படமான கேப்டன் அமெரிக்கா ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீங்க எந்த படத்திற்கு வெயிட் பண்றீங்க?

News February 12, 2025

இன்று ஹக் டே: உன்னை மட்டும் கட்டிக்கொண்டு வாழ சம்மதம்

image

இன்று Hug day. காதலை வெளிப்படுத்த இதை விட சிறப்பான வழி உண்டோ! மன அழுத்தத்தை குறைக்கும் ஒருவித மருந்தாகும் இந்த Hug. அன்பாக பேசும் 100 வார்த்தைகளுக்கு ஒரு ஹக் சமம். எண்ணற்ற உணர்ச்சிகளை – அன்பு, ஆறுதல், ஆதரவு மற்றும் புரிதல் என அனைத்தையும் ஒரு ஹக்கில் சொல்லிவிடலாம். கட்டிப்பிடிப்பதன் மூலம் ‘காதல் ஹார்மோன்’ ஆக்ஸிடோசின் வெளியாகி காதலர்களுக்குள் இன்னும் இணைப்பை வலுபெற செய்கிறதாம்.

error: Content is protected !!