News February 12, 2025
குட்டை உடை அணிவது குற்றமல்ல: நீதிமன்றம்

பாரில் ஆபாச நடனம் ஆடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 பெண்களை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. பொது இடங்களில் குட்டையான உடைகளை அணிவது குற்றமல்ல எனவும், அவர்களின் நடனம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியது. குட்டை உடையணிந்து ஆபாச நடனம் ஆடியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், இதனால் சங்கடத்திற்கு ஆளான சாட்சிகளை ஆஜர்படுத்த தவறியதாக நீதிமன்றம் கூறியது.
Similar News
News March 10, 2026
விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி: ஜெகன் மூர்த்தி

விஜய்யின் தவெக NDA கூட்டணிக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், விஜய் NDA கூட்டணிக்கு வருவது உண்மையா என தெரியவில்லை. இதுவரை வதந்தியாகவே உள்ளது என்றார். ஒருவேளை விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் NDA கூட்டணி தான் வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளார்.
News March 10, 2026
அந்த மனுஷன் கூட நடிக்க முடியாது.. சோனா ஓபன் டாக்!

‘ஆளவிடுங்கடா சாமி, அந்த மனுஷன் கூட நடிக்க முடியாது’ என வடிவேலுவுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகை சோனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ‘குசேலன்’ படத்திற்கு பிறகு வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் வந்த நிலையில், அவரை தன்னால் ஹேண்டில் செய்ய முடியாது என்பதால் நடிக்க மறுத்ததாக தெரிவித்தார். இதற்கு மேல் எதுவும் பேச முடியாது என குறிப்பிட்ட அவர், சுயமரியாதை முக்கியம் எனவும் கூறியுள்ளார்.
News March 10, 2026
கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் ₹1,500-க்கு விற்பனை!

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்தியாவில் LPG சிலிண்டர்களுக்கான தேவை பல மடங்காக அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் சில இடங்களில் முன்கூட்டியே சிலிண்டரை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சந்தையில் சிலிண்டரின் விலை அதிகபட்சமாக ₹1,500-ஐ எட்டியுள்ளது. போர் காரணமாக மார்ச் 7-ம் தேதி வீட்டு சிலிண்டர்களின் விலையில் ₹60-ஐ ஏற்கனவே மத்திய அரசு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


