News February 12, 2025

பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!

Similar News

News February 12, 2025

BCCIஐ வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

image

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பெறாததால், தேர்வுக்குழுவை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். ஜெய்ஸ்வாலின் ODI கெரியரையே கம்பீர் பாழாக்கி விட்டதாகவும், ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு மாற்றாக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்வதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ENGக்கு எதிரான ஒரு ODIயில் விளையாட விட்டு, அவரது திறமையை பரிசோதிப்பதா எனவும் வினவுகின்றனர்.

News February 12, 2025

ஜெ., மறைவிற்கு பின் போட்ட திட்டம் இப்போ நடக்குமா?

image

MGR காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையன், சசி, TTVக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்தவர். ஜெ., மறைவுக்கு பிறகு அவரை தான் முதல்வராக்க திட்டமிடப்பட்டிருந்தது. திடீர் திருப்பமாக தலைமை பதவிக்கு இபிஎஸ் வந்தார். அதன்பின், சசிகலா நீக்கம், பாஜக உடனான கூட்டணி முறிவு என அதிரடி காட்டியதால், தற்போது<<15434980>> EPS-க்கு <<>>செங்கோட்டையன் மூலம் செக் வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News February 12, 2025

டான் படத்தின் காப்பியா டிராகன்?

image

‘டிராகன்’ படம் கண்டிப்பாக ‘டான்’ படத்தின் காப்பி இல்லை என அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விளக்கமளித்துள்ளார். 2 ஆண்டுக்கு முன் வந்த படத்தை எப்படி அப்படியே காப்பி அடிக்க முடியும் எனவும், டிரெய்லர் கட்ஸ் வேண்டுமானால், அப்படத்தை ஞாபகப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், டிராகன் படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!