News March 28, 2024
திருப்பத்தூர்: நாளை நீதிமன்ற திறப்பு விழா

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உதயமானது. இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட நீதிமன்றம் திறக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நீதிமன்ற திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Similar News
News November 3, 2025
திருப்பத்தூர்: கல்லூரி மாணவர் மீது தாக்குதல்!

திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் திலிப் குமார், கடந்த (நவ.1) அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்து திலிப் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, திலீப்குமார் அளித்த புகாரின் பேரில், நாட்றம்பள்ளி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயராகவன் என்பவரை கைது செய்தனர்.
News November 3, 2025
திருப்பத்தூர்: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 3, 2025
திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் அல்லது திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.


