News February 12, 2025
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
எடப்பாடி பழனிசாமிக்காக நடைபெற்ற அத்திக்கடவு – அவினாசி திட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News February 12, 2025
டான் படத்தின் காப்பியா டிராகன்?
‘டிராகன்’ படம் கண்டிப்பாக ‘டான்’ படத்தின் காப்பி இல்லை என அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விளக்கமளித்துள்ளார். 2 ஆண்டுக்கு முன் வந்த படத்தை எப்படி அப்படியே காப்பி அடிக்க முடியும் எனவும், டிரெய்லர் கட்ஸ் வேண்டுமானால், அப்படத்தை ஞாபகப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், டிராகன் படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 12, 2025
எம்.பி.யாகும் கமல்ஹாசன்.. வெளியேறும் ஒருவர் யார்?
தமிழகத்தில் வரும் ஜூலையுடன் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. கூட்டணி ஒப்பந்தப்படி கமல்ஹாசன் எம்.பி.யாக உள்ளார். திமுகவின் வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, திமுக கூட்டணியில் உள்ள வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், கமல்ஹாசன் எம்.பி. ஆவதால் தற்போதுள்ள திமுக எம்.பி.க்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது.
News February 12, 2025
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரோகித், கோலி
IND – ENG இடையிலான 3rd ODI, இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ரோகித் 13 ரன்கள் எடுத்தால் ODIயில் 11,000 ரன்களையும், கோலி 89 ரன்கள் எடுத்தால் 14,000 ரன்களையும் கடப்பார்கள். கடந்த சில போட்டிகளில் ரோகித், கோலி பேட்டிங் மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதற்கு கடைசி போட்டியில் ரோகித் பதிலடி கொடுத்த நிலையில், இன்றைய போட்டியில் கோலி பதிலடி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.