News February 12, 2025

இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல

image

மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சத்தீஸ்கர் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. அதேபோல,15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் இயற்கை மாறாக எந்த வகையில் உடலுறவு வைத்தாலும் அது பலாத்காரம் ஆகாது என்றும் நீதிபதிகள் கூறினர். சத்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர், கணவரின் இயற்கைக்கு மாறான உடலுறவால் மரணமடைந்த வழக்கை விசாரித்த போது, இந்தக் கருத்தை ஹைகோர்ட் தெரிவித்தது.

Similar News

News February 12, 2025

அதிமுக உட்கட்சி விவகாரம் வழக்கில் இன்று தீர்ப்பு

image

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இபிஎஸ் – செங்கோட்டையன் விவகாரம் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இத்தீர்ப்பை, அதிமுக தலைமை முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News February 12, 2025

பெரிய படங்களை பார்த்து ஏமாற்றமடைந்தேன்: ரெஜினா

image

பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள், ஸ்டார் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார். பல பெரிய படங்களில் பெண் கேரக்டர்கள் மோசமாக எழுதப்பட்ட விதத்தால் ஏமாற்றமடைந்ததாகவும், ஒரு படத்தில் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அந்த படத்தின் கதையின் வலிமையை உணரலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

News February 12, 2025

மீண்டும் உடைகிறதா அதிமுக?

image

2026இல் BJP உடன் கூட்டணி இல்லை என EPS விடாப்பிடியாக இருப்பதால், அவருக்கு பதில் அதிமுக தலைமை பொறுப்புக்கு செங்கோட்டையனை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தான் இபிஎஸ் நிகழ்ச்சி புறக்கணிப்பு என சொல்லப்படுகிறது. இதனால், EPS அணி – செங்கோட்டையன் அணி என அதிமுக 2ஆக உடைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அவரின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!