News February 12, 2025
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (11.02.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Similar News
News March 10, 2026
BREAKING மதுரை: இளைஞர் அடித்துக் கொலை; 8 பேர் கைது

திருவாதவூர் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா முதல் மரியாதை தொடர்பாக மணிகண்டன்(36) மணி(53)க்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்றிரவு மணி சிலருடன் வந்து மணிகண்டனை தாக்கினார். இதை அவரது சகோதரர் அர்ஜுன்(32) உறவினர் அருணாச்சலம்(55) தடுத்தனர். கட்டை மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டதில் அர்ஜுன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலூர் போலீசார் மணி உட்பட 8 பேரை கைது செய்து இன்று விசாரிக்கின்bறனர்.
News March 10, 2026
மதுரை: ஆபத்தில் உணவகங்கள்; லட்சம் பேருக்கு வேலை இழப்பு

மதுரை உணவக உரிமையாளர்கள் சங்க நிர்வாகி குமார், சிலிண்டர் விநியோகம் இரு நாட்களுக்குள் சீரடையாவிட்டால் 3வது நாள் முதல் உணவகங்களை மூட நேரிடும் என எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மூன்றாவது பொது முடக்கத்தை போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வதோடு, மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தகவல்.
News March 10, 2026
BREAKING மதுரை பிரபல ரவுடி கைது!

மேலூரை சேர்ந்த சுவாமிநாதன்(54) தனது இடத்தை ரூ.45 லட்சம் பெற்று ராதாகிருஷ்ணன் என்பவருக்கு கடன் பத்திரமாக கொடுத்தார். மீண்டும் அவ்விடத்தை பெற முயன்றதில் கிடைக்காததால், வரிச்சியூர் செல்வத்தை அணுகி ரூ.67 லட்சத்தை கொடுத்து தனது இடத்தை மீட்டு தரும்படி கேட்டார். அவர் அதை செய்யாததால் கோர்ட்டில் சாமிநாதன் வழக்கு தொடுத்தார். மேலூர் போலீசார் நேற்றிரவு செல்வத்தை கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.


